மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்த 9 பேர் கைது
மதுரையில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 830 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்;
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் எட்டு கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
மதுரை, மாட்டுத்தாவணி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. இவர் பேருந்து நிலைய பிளாட்ஃபாரங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது மூன்றாவது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும் படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். அவர் நடத்திய விசாரணையில் தெற்கு வாசல் பாண்டிய வேளாளர் தெரு ஜாகிர் உசேன் மகன் சையது இப்ராகிம்(23) , ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் இரண்டாவது தெரு குருசாமி மகன் சசிகுமார்(19,) மகபூப்பாளையம் காட்டுநாயக்கர் தெரு தினகரன் மகன் சுந்தரபாண்டி(19 )என்று தெரியவந்தது அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து எட்டு கிலோ கஞ்சாவையும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தார். தப்பிய நபர் சென்னை எண்ணூர் வள்ளுவர் நகர் சரவணன் என்ற சரவணன் மூர்த்தி என்று தெரிய வந்தது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரேஸ்கோர்ஸ் ரோட்டில் 830 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்: ஆறு பேர் கைது
மதுரை, தல்லாகுளம் போலீசார் ரேஸ் கோர்ஸ் சாலையில் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சோதனைக்கு நிறுத்திய நான்கு வாகனங்களில் 830 கிலோ தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அந்த வாகனங்களில் வந்த ஆறு வாலிபர்களை பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், வேடசந்தூர் தாடப்பிள்ளை மகன் காசிராமன்( 28,), தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கிட்டம்பட்டி ராமலிங்கம் மகன் விக்ரம்( 35,), அதேபகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் தயாநிதி ( 32, ) சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுந்தரம் நகர் 2வது தெரு கதிரவன்(42,), சிங்கம்புணரி பணம் பட்டி வெள்ளைச்சாமி(42,) திண்டுக்கல் சாணார்பட்டி ஆவிணிப்பட்டி சக்திவேல் மகன் ஹரிஷ்பாபு ( 20 )என்று தெரிய வந்தது. அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 830 கிலோ பல்வேறு கம்பெனிகளைச் சேர்ந்த புகையிலை பாக்கெட்டுகளையும் ஏழு செல்போன்களையும் பணம் ரூபாய் 30 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த கைலாஷ் குமார் .அவர் தப்பி ஓடி விட்டார் அவரை தேடி வருகின்றனர்.