தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2021-07-08 16:46 GMT
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர்.
  • whatsapp icon

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகளால் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அலை வந்தால், அதையும் எதிர்கொள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்து வருவதுடன், குழந்தைகளுக்காக அரசு மருத்துவ மனைகளில், கூடுதலாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கிலிருந்து அரசு தளர்வுகள் அளித்திருந்தாலும், பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிவதுடன், தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முன்வரவேண்டும். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பூசி முகாம்களும், நோய் கண்டறிதல் முகாம்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

Tags:    

Similar News