குப்பை சேகரிக்கும் மையத்தில் தீத்தடுப்பு நடவடிக்கைகள்

தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் ஆய்வு;

Update: 2022-04-29 13:15 GMT

தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் ஆய்வு நடத்தினர்

தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் ஆய்வு:

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில், தினந்தோறும் சேரும் குப்பைகள் வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்பட்டு உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்படி குப்பை சேகரிப்பு மையத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் ஏற்படாமல் தடுத்திடவும், அவ்வாறு தீ விபத்து ஏற்பட்டால், அவற்றை தடுப்பது குறித்தும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது, பாதுகாப்பாக உரக்கிடங்கை கையாள்வது உள்ளிட்ட தீ விபத்து தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள, மேயர் மற்றும் ஆணையாளர் உத்தரவின்படி, மாநகராட்சி நகரப்பொறியாளர், மாநகராட்சி வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில், ஆய்வு மேற்கொண்டார். மேலும், குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால், தடுப்பது குறித்து உரிய அறிவுரைகள், விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது.

இந்த ஆய்வில், நகரப்பொறியாளர் அரசு, உதவி செயற் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் த.மயிலேறிநாதன், சுகாதார அலுவலர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News