மதுரை மாநகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை உரம் விற்பனை: ஆணையர்
விவசாயிகளுக்கு மட்டும் இயற்கை உரம் விற்பணைக்கு மாநகராட்சி நிர்வாகம்:;
மதுரை மாநகராட்சி வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் இயற்கை உரத்தை விவசாயிகள் பொதுமக்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கி பயன்பெறலாம் என ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.94ல் வெள்ளைக்கல் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை மையத்தில், உருவாக்கப்படும் இயற்கை உரத்தை சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டையினை பரிசீலித்து இயற்கை உரம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் , விவசாயிகள் கொண்டுவரும் வாகனங்களில், உரம் ஏற்றுவதற்கு ஏற்று கூலியாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும், இதர விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகியோர் மாநகராட்சி வெள்ளக்கல்லில் உருவாக்கப்படும் இயற்கை உரத்தினை கிலோ ரூ.1 (ஜி.எஸ்.டி. உட்பட) என்ற சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம்.