மதுரை அருகே விரகனூரில் தாயை கொலை செய்த மகன், குடிபோதையில் வெறிச் செயல்
மதுரை அருகே விரகனூரில் குடிபோதையில் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ,விரகனூர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணிய பிள்ளை. இவரது மனைவி பூ மயில் (வயது 85). இறந்த பூ மயிலுக்கு கதிரேசன் செந்தில் ரேவதி தமிழச்சி என இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் வீட்டில் , செந்தில் குடிபோதையில் பூ மயிலின் கழுத்தில் துண்டை வைத்து நெருக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
செந்திலுக்கு, குடிப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிபோதையில் , தகராறு செய்து பூ மயிலை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
இது குறித்து, போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.