மதுரை நகர குற்றச் செய்திகள்: போலீஸார் விசாரணை
மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்;
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:போலீஸ் விசாரணை.
மதுரை அருகே சக்கிமங்கலம் கல்மேடுவை சேர்ந்தவர் முஹம்மது ஈஷா மகன் நிஜாம் சாருதீன் 20.இவர் சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில் மீண்டும் திடீரென்று அவருக்கு வலியை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிஜாம் சாருதீன் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் மும்தாஜ் பேகம் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் நிஜாம் சாருதீன் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லாபுரம் ஆர்ச் அருகே ஓட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு:
மதுரை,அவனியாபுரம் முல்லை நகர் அவணி மூல வீதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் அருண்குமார்24. இவர் வில்லாபுரம் ஆர்ச் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையயை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மூன்று வாலிபர்கள் அங்கே வந்தனர். அவர்களின் ஒருவரர் தான் கையில் கொணண்டுவந்த பெட்ரோல் குண்டை பற்ற வைத்து கடைக்குள் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.இதனால் கடையயில் தீப்பற்றியது.கடைக்குளள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்களும் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அருண்குமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.அவர்கள் எதற்காக வீசினார்கள் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்மீது பொடி தூவி ஒன்பது பவுன் தாலி செயின் பறிப்பு.
மதுரை அவனியாபுரரம் சந்தோசம் நகரர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராபின்சன் அருள்ராஜ் மனைவி ஞான சுதன் சிலி 38. இவர் வீட்டின் அருகே ஸ்டேஷனரி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்த கடையை இவர் தான் கவனித்து வந்தார்.சம்பவத்தன்று இவர் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ஞானசுதன்சிலி மட்டும் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார் .அப்போது அந்த கடைக்கு வந்த ஆசாமி அவரிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவரது கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவினார்.அவர் வேதனையால் அலறிக்கொணடிருந்தபோது அவர் அணிந்திருந்த ஒன்பது பவுன் தாலி செயினை பறித்துச் சென்று ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஞான சுதன் சிலி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கண்ணில் மிளகாய் பொடி தூவி செயின்பபறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர் மயங்கி விழுந்து மரணம்
மதுரை அண்ணாநகர் மானகிரியை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சரண்குமார் 32. இவர் பெங்களூருவில் லேப்டடாப்பழுதுநீக்கும் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மானகிரியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
இவருக்கு ஏற்கெனவே இதய நோய் சம்பந்தமாக இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியி லேயே சரண்குமார் உயிரிழந்தார் .
இந்த சம்பவம் குறித்து, அவருடைய தந்தை அழகர்சாமி அண்ணா நகர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சரண்குமாரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.