மதுரை சித்திரை திருவிழா 5ஆம் நாள் திருவிழா: தங்க குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

மதுரை சித்திரை திருவிழா 5ஆம் நாள் திருவிழா மீனாட்சி, சுந்தரேசுவரர் பிரியாவிடை அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா;

Update: 2022-04-10 00:43 GMT

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 5 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் கற்பகவிருட்சம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். அந்த வகையில், சித்திரை திருவிழாவின் 5 ஆம் நாள் திருவிழாவையொட்டி,  மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் தங்கப் சப்பரத்தில் வீதி உலாவாக வந்த மீனாட்சி சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் வடக்கு மாசி வீதியில் உள்ள இராமாயணச் சாவடியில் இன்று சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனை த்தொடர்ந்து , மாலை தங்கக் குதிரையில் மீனாட்சி, சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் மண்டகபடியில் இருந்து நான்கு மாசி வீதிகளிலும் சுவாமியும், மீனாட்சி அம்மனும் வீதி உலாவாகச் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Tags:    

Similar News