உடனடி சான்றிதழ் தேவையா? லஞ்சம் குடுங்க; வாங்கிட்டு போங்க : வைரலாகும் விடியோ

மதுரையில் சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Update: 2021-07-12 10:15 GMT

இ.மைய பெண் பணியாளர்.

உடனடி வாரிசு சான்றிதழுக்கு ரூ. 3500 லஞ்சம் பெற்ற இ- சேவை மைய பெண் - காலதாமதம் ஆனதால், வாடிக்கையாளருக்கும் அந்த பெண்ணுக்கும், இடையே வாக்குவாத வீடியோ காட்சிகள் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை, தனியார் இ- சேவை மூலமாக பிறப்பு, இறப்பு, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென ,அரசு நிர்ணயிக்கப்பட்ட  கட்டணம் சான்றிதழுக்கு ஏற்றார் போல்,  வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இ-சேவை மைய நிர்வாகிகளை, அரசு அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வாங்க ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவருக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதும் அவர், இணையதளம் மூலமாகவே, வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்து, மதுரை பழங்காநத்தம் பத்திர பதிவு அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது ,அங்கு பணியில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக வாரிசுசான்றிதழ் வேண்டுமென்றால், அதற்காக ரூ 3500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளாராம். அதற்கு, சாய் கிருஷ்ணன் அந்த பணத்தை கொடுத்து உள்ளதாக தெரிகிறது.

இருந்தபோதிலும், வாரிசு சான்றிதழ் வழங்குவதில், இ சேவை மைய அதிகாரி கால தாமதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சாய் கிருஷ்ணன் இ-சேவை மைய பெண்ணிடம் வாக்குவாதம் செய்து உள்ளார். அப்போது, மேற்கண்ட இரண்டு பேர் இடையேயான வாக்குவாதத்தை அங்கு உள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் பரவ விட்டு உள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News