மயானத்தில் அதிக கட்டணம்: ஊழியர்கள் மீது போலீஸில் புகார்
மதுரை மயானத்தில் தகனம் செய்ய கூடுதல் கட்டணம்: போலீஸார் வழக்குப் பதிவு.;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கவிற்குட்பட்ட , அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதற்கும், தகனம் செய்வதற்கு கிராம பொதுமக்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மயான ஊழியர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது .
இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இறந்த நபர்களின் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். இந் நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் விசாரணை செய்ய மயான ஊழியர்களாக பணிபுரிந்து வந்த முனியசாமி மற்றும் லக்ஷ்மணன் உள்பட மயான ஊழியர்கள் மீது அவனியாபுரம் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் இது தொடர்பாக விசாரணை செய்தார். விசாரணை மேற்கொண்டதில், ஊழியர்கள் மீது அளிக்கப்பட்ட புகார்கள் உறுதி செய்யப்பட்டதால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப் பெயர் அளிக்கும் வகையில், நடந்து கொண்ட காரணத்தினால் மயான ஊழியர்கள் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த, அவனியாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்..!