மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.

மதுரை விமான நிலையம் 1956 இல் உருவாக்கப்பட்டது. 2010 இல் யூ.பி.ஏ. அரசாங்கத்தில் புதிய முனையம் கிடைத்தது.

Update: 2021-12-08 07:15 GMT

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்(பைல் படம்)

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்றார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்.

நாடாளுமன்ற மக்களவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில், மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் (பொறுப்பு தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர்  வலியுறுத்தி பேசினார்.

மதுரை விமான நிலையம் 1956 இல் உருவாக்கப்பட்டது. 2010 -இல் யூ.பி.ஏ. அரசாங்கத்தில் புதிய முனையம் கிடைத்தது. ஆனால், இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக காத்திருக்கிறோம். கோரக்பூர்,திருப்பதி விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையம் ஆனது. ஆனால், மதுரை விமான நிலையம் மலேசியா,சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பந்தத்திற்காக காத்திருக்கிறோம். மொத்த தென்னிந்தியா தென் தமிழகம் மதுரை விமான நிலையம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்தை விரைவில் வழங்குமாறு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று  குறிப்பிட்டார். 

Tags:    

Similar News