மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-16 09:36 GMT

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுக வினருக்கும், போக்குவரத்து காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஏராளமான அதிமுகவினர் வந்திருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருந்த நிலையில், சில தொண்டர்கள் அவர் செல்லும் நுழைவு வாயில் அருகே வழியில் நின்று வரவேற்பு அளித்தனர் .

அப்போது அவர்கள் அங்கு போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பேரி காட்களை  அகற்றி விட்டு நின்றனர். இதனால் போக்கு வரத்து காவல் துறையினருக்கும் அதிமுக வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காரை நிறுத்துமிடத்தில் அதிமுகவினருக்கும், விமான நிலைய அதிகாரிகள், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சென்ற பிறகு போக்கு வரத்து காவல் துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது மீண்டும் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News