முழு ஊரடங்கு: திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடந்த திருமணங்கள்
முழு ஊரடங்கு எதிரொலியாக, திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்றன.;
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளது.இன்று முகூர்த்த நாள் என்பதால், கோவில்களில் பல திருமணங்கள் நடைபெறவிருந்தன. அவை எளிமையாக, கோவில் வாசலில் நடைபெற்றன.
அவ்வகையில், இன்று, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன. குறைந்தளவு உறவினர்களைக் கொண்டே, கோவில் வாசலில் மாலை மாற்றி, தாலி கட்டி, திருமணங்கள் நடைபெற்றன. இந்தத் திருமணங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்தும் பலர் பங்கேற்றனர்.
எனினும், அதிக அளவு கூட்டங்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில் வாசலில் ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தினர்.