மதுரை அருகே மதுபானம் அருந்துவதற்காக திரண்ட சென்ற மதுப்பிரியர்கள்
தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது;
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் திறந்திருந்த டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க சாரை சாரையாக குவிந்த குடிமகன்கள்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 இன்று வழக்கம் போல் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டது. தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று பகுதி 5410 கடையில் கூட்டம் கூட்டமாக குடிமகன்கள் சரக்கு வாங்கி குவிந்தனர். இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சித்தும் முடியவில்லை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால்நிலையூர் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.