மதுரை மாநகராட்சியில் ,தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு:

மதுரை மாநகராட்சியில் ,தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-01-30 10:40 GMT

மதுரை மாநகராட்சி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி : ஆணையாளர் லி.மதுபாலன தலைமையில் ஏற்பு:

மதுரை:

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் மற்றும் அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஆணையாளர் லி.மதுபாலன், தலைமையில் இன்று (30.01.2024) அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர்.

ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

தொழுநோய், மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்பதனை நான் அறிவேன். உணர்ச்சியற்ற தேமல், படை, போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன். அவர்களை அன்பாகவும், எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும்,

வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன். தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்ககூடாது போன்ற விபரங்களை அண்டை அயலாருக்குத் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன். தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என, அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோல்,

அனைத்து மண்டல அலுவலங்களிலும் உதவி ஆணையாளர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன் , துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News