மதுரை அருகே பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா..!

மதுரை அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு அசத்தினர்.

Update: 2024-08-26 13:27 GMT

கிருஷ்ண ஜெயந்திவிஸாவில் கிருஷ்ணர் ராதா வேடமிட்ட குழந்தைகள் 

மதுரை அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

மதுரை.

மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள எஸ்.வி.கே நகரில், மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிறப்பாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி முன்னிலை வகித்தார்.


பள்ளி மழலை குழந்தைகள் கிருஷ்ணர், ராதை மற்றும் கிருஷ்ணன் என மாறு வேடங்கள் அணிந்து காட்சியளித்தனர். கண்ணனுக்கு படையல் வைத்து பூஜைகள் செய்து விழாவைக் கொண்டாடினா். விழாவில், ராதை, கிருஷ்ணா் வேடங்களில் வந்திருந்த திரளான குழந்தைகள் நடனமாடியும், பஜனைகள் பாடியும் விழாவை சிறப்பித்தனா். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகளுக்கு ஒலி ஒளி காட்சிகள் மூலமாக தாளாளர் நித்யா தேவி கதைகளாக கூறினார்.

மழலையர்களுக்கு இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாட்டினை ஜெயலட்சுமி, சுபா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கெவின் குமார் நன்றி கூறினார். 

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு குறும்புகள் செய்தது பார்ப்பதற்கு ரசனைமிகுந்ததாக இருந்தது. 

Tags:    

Similar News