Kandasasti Vizha At Tiruparankundram திருப்பரங்குன்றம் முருகன் தேரில்,பவனி
Kandasasti Vizha At Tiruparankundram திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா உச்சநிகழ்ச்சியாக சட்ட தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.;
கந்த சஷ்டியையொட்டி சட்டத்தேரில் திருப்பரங்குன்றம் முருகனின் திருவீதியுலா நடந்தது.
Kandasasti Vizha At Tiruparankundram
கந்த சஷ்டி விழாவானது நேற்றுதமிழகத்திலுள்ள முக்கிய முருகன் கோயில்களில் விமர்சையாக நடந்தது. திருச்செந்துார் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்திலும் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கந்த சஷ்டி திருவிழா கடந்த 12 ந் தேதிகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 17-ந்தேதிபில் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிகர நிகழ்ச்சியாக நேற்று 30 முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் லீலை நடந்தது.
இதனைத் தொடர்ந்து, கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானை மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக இன்று சட்ட தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி, கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் தயாராக இருந்தது.
இந்நிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்கசர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கமயில்வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டு வந்து சட்டத் தேரில் அமர்ந்தார். உடனே, அங்கு கூடியிருந்தஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,வீர வேல்முருகனுக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பி படி சட்டத்தேரின் வடத்தினைபிடித்து இழுத்தனர்.
இந்த சட்டத்தேரானது சன்னதி தெரு வழியாக கீழ ரதி வீதி, பெரிய ரதவீதி வழியே மலையைச் சுற்றி வந்துமேலரத வீதி,சன்னதி தெரு வழியே நிலைக்குவந்தது இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்கள் கைகளில்கட்டி இருந்த காப்புகளை கழற்றி அவரவர் ஊருக்கு சென்றனர்.