மதுரை அருகே கல்குவாரி மில் விழுந்து இருவர் உயிரிழப்பு
மதுரை நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலையில் அருகே உள்ள கல்குவாரியில் விழுந்து இருவர் உயிரிழப்பு;
நீரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்
மதுரை மாவட்டம், அருகே நாகமலைபுதுக்கோட்டை அருகே ஆலம்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்த முத்தையா மகன் சிவராமன் ( 13).செக்காணுரணி தென்றல் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிஷோர்குமார் ( 32.) கட்டுமான தொழில் நடத்தி வரும் கிஷோர். தனது நண்பர் முத்தையா மகன் சிவராமனுடன், டூவீலரில் பில்லர் சாலையில் உள்ள குவாரி பகுதியில் தண்ணீரில் முழ்கி இறந்தனர்.
நேற்று மாலை சென்ற கிஷோர், சிவராமன் இருவரும் வராததால், நாகமலைபுதுக்கோட்டை போலீஸில் புகார் செய்தனர்.இந்நிலையில் ,கிஷோர் ஒட்டி சென்ற ஸ்கூட்டி குவாரிபள்ளத்தில் இருப்பதை பார்த்து தகவல் கொடுத்ததையடுத்து, மதுரையில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிவராமன் உடலை மீட்டனர் இதுகுறித்து ,நாகமலை புதுக்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து இருவர் உடலையும் கைப்பற்றி, உடற்ராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் நாகமலைபுதுக்கோட்டை பில்லர் சாலையில் உள்ள கல்குவாரியில் விழுந்து இறந்தால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.விபத்து குறித்து, நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.