அலங்காநல்லூர் அருகே தென் இந்திய அளவில் கபடி போட்டி: வென்ற அணிக்கு பரிசளிப்பு
தென்னிந்திய அளவிலான கபடிப் போமொத்தம் 64 அணிகள் கலந்து கொண்டன;
சினிமா நடிகரும், சென்னை தொழிலதிபரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான மரவபட்டி கே.ஜி. பாண்டியன் பரிசுகளை வழங்கினார்.
அலங்காநல்லூர் அருகே தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, சின்ன ஊர்சேரி கிராமத்தார்கள் ஒத்தவீடு அனைத்து ஊர் நண்பர்கள் சார்பாக,எஸ். கே .சதீஷ் குமார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது . மொத்தம் 64 அணிகள் கலந்து கொண்ட நிலையில், முதல் பரிசு கல்லணை அணியும், இரண்டாம் பரிசு ஈரோடு அணியும், மூன்றாம் பரிசு அலங்காநல்லூர் அணி, நான்காவது பரிசு கோவை அணிகளுக்கான பரிசுகளை , சினிமா நடிகரும், சென்னை தொழிலதிபரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான மரவபட்டி கே.ஜி. பாண்டியன் பரிசுகளை வழங்கினார்.