மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை
Jewelry robbery at a locked house in Madurai
மளிகை கடைக்காரர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருநகர் லயன் சிட்டியில் வசித்து வருபவர் பொன்ராஜ் (55) இவருடைய ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் தனியாக பொன்ராஜ் வசித்து வந்துள்ளார். இவர்,திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகில் கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு இரவு 11 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, திருநகர் போலீசில் பொன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.