மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகை திருட்டு
மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம், ஓடும் பேருந்தில் ஐந்தரை பவுன் நகையை திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை தனக்கங்குளம் கலை நகர் 1வது தெருவை சேர்ந்தவர் அபிநாத்; இவரது மனைவி கவுசல்யா வயது, 22. இவர், ஆரப்பாளையத்தில் இருந்து திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த ஐந்தரை பவுன் தங்க நகையை, பஸ்சில் மர்ம் நபர். திருடி சென்றுள்ளனர்.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தனது பையில் இருந்த நகை பார்த்தபோது நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த திருநகர் காவல் நிலையத்தில், கவுசல்யா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.