மதுரையில் சர்வதேச யோகா தினம்...!

மதுரை, எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது

Update: 2024-06-21 11:21 GMT

யோகா தினத்தில் யோகா செய்யும் மாணவர்கள் 

சர்வதேச யோகா தினம்:

மதுரை:

மதுரை, எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை தாங்கினார். 

உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். யோகா பயிற்றுநர்கள் கௌஸ் பாட்ஷா, மீனாட்சி, சாந்தி, ஜெயப்பிரியா, செந்தில் ஆகியோர் யோகா செய்யும் முறை, வகைகள், கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும், தடாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், பச்சிமுத்து ஆசனம், யோகமுத்திரை ஆசனம், சூரிய நமஸ்காரம் முதலிய ஆசனங்களை செய்து காட்டி அதன் பலன்களை விளக்கினர்.

ஆசிரியை அனுசுயா 2024 ஆம் ஆண்டின் கருப்பொருள் 'சுய மற்றும் சமூகத்திற்கான யோகா' எனக் கூறி நலவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் பங்கினை விளக்கி கூறினார். மாணவி பைரோஸ்பானு நன்றி கூறினார்.

விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் விஜயலட்சுமி, மனோன்மணி, சித்ரா, அகிலா, அம்பிகா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News