அவனியாபுரம் ஐல்லிக்கட்டுக்கு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
மதுரை அருகே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.;
மதுரை அருகே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில், 17 லட்சத்து 61 ஆயிரத்திற்காக டெண்டர் விடப்பட்டு, விழா மேடை |தடுப்பு வேலிகள் , கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கான தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் (ஜனவரி 15)அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
ஜல்லிகட்டு போட்டி தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இடையே மாவட்ட நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவுக்கு வராத நிலையில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடைபெறுவதற்காக 17 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு தடுப்பு வேலைகள், குடிநீர், விழாமேடை மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.
தென்காள் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இல்லாமல் மதுரை மாநகராட்சி ஏற்று நடத்துவதால், கால் கோல் விழா ஏதும் நடத்தப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.