சோழவந்தானில் சுயேட்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
சோழவந்தானில் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு, கல்வியாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், தொழிலதிபரும், பாஜக மாநில நிர்வாகியுமான எம். மணி என்ற முத்தையா மனைவி வள்ளிமயில் ஆகியோர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் வாக்கு கேட்டு, சோழவந்தான் பகுதியில், தீவிர பிரசாரம் செய்தனர்.இதேபோல், மணி என்ற முத்தையா, அவரது மகள் சிவகாமி ஆகியோரும், தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.