மதுரையில், திருடனை காலில் சுட்டு பிடித்த போலீஸார்
மதுரையில் செயின் திருடனை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மதுரையில் செயின் திருடனை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 -ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச் சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை சிறிது தூரம் இழுத்துச் சென்றனர்.இந்த சம்பவம் மதுரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனால், குற்றவாளியை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என, மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இது தொடர்பாக, செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
மேலும், இது வழக்கில் தொடர்பாக தொடர்புடைய காலவாசல் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை பிடிக்க செல்லூர் போலீஸார் பொட்டல் பகுதிக்குச் சென்ற போது செயின் பறிப்பில் ஈடுபட்ட ஸ்டீபன் ராஜ் போலீசாரை ஆயுதம் கொண்டு வெட்டியதில் எஸ்.ஐ. -க்கு காயம் ஏற்பட்டது
இதைத் தொடர்ந்து, போலீஸார் தற்காப்புக்காக ஸ்டீபன் காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பிடிக்கும் போது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் பாராட்டு குவிந்து வருகிறது..