புதைசாக்கடை பணிக்கு குழி தோண்டியபோது கழிவுநீர் குழாய்கள் உடைப்பால் மக்கள் அவதி
மதுரை மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள், இது குறித்து தக்க கவனம் செலுத்தி குழிகளை தோண்ட வலியுறுத்தல்;
மதுரை மாநகராட்சியில் புதை சாக்கடைக்காக குழிகள் தோண்டும்போது பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், மேலமடை ஆகி பகுதிகளில் சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையில் தோண்டப்படுகிறது. அவ்வாறு தோண்டப்படும் போது, வீடுகளில் இருந்து புதை சாக்கடை இணைக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு, சரி செய்யப்படாமல் குழிகள் மூடப்படுவதால், வீடுகளிலே கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், வீடுகளை வசிப்போர் அல்லல் படும் நிலை ஏற்படுகிறது.
மதுரை மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள், இது குறித்து தக்க கவனம் செலுத்தி புதை சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது வீடுகளில் இருந்து வரும் குழாய்கள் உடைப்புஏற்பட்டால், அதை சரி செய்து பிறகே, தோண்டிய குழிகளை மூட வேண்டும் என, ஒப்பந்தக் காரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை தாசில்தார் நகர், வீரவாஞ்சி தெருவில், பல இடங்களில் புதை சாக்கடை பணிக்காக குழாயில் பதிக்கும் போது, வீடுகளில் இருந்து வரும் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளில் கழிவு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.