மதுரையில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: ஒருவர் கைது

மதுரை மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்து கணவரை போலீசார் கைது செய்தனர் .;

Update: 2023-02-21 09:52 GMT

பைல் படம்.

மதுரை மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்து கணவரை போலீசார் கைது செய்தனர் .

திருநகர் எஸ். ஆர். வி. நகர், காவேரி முதல் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி சாந்தி 40. இவரது மகனுக்கு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த, கூடல் நகர் சீனிவாசா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் உதயகுமார் 44. அவருடைய மனைவி சுமதி 41 .

இருவரும் மின்வாரியத்தில் தெரிந்தவர்கள் இருப்பதாக கூறி, அதில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதை தொடர்ந்து ரூ ஏழு லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை . ஏமாற்றியது தெரியவந்தது .

இது குறித்து, சாந்தி திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார், கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்து, கணவர் உதயகுமாரை கைது செய்தனர்.

சிகிச்சைக்கு வந்தவர் பிணமாக மீட்பு

திருப்பத்தூரில் இருந்து சிகிச்சைக்கு மதுரை வந்தவர் மாட்டுத்தாவணியில் பிணமாக மீட்கப்பட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காளியம்மன் கோவில் தெரு உசேன் அம்பலம் நகரை சேர்ந்தவர் வைரவ சுந்தரம் 62. இவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சை மதுரை மருத்துவமனையில் பெற்று வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மதுரைக்கு சிகிச்சைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மாட்டுத்தாவனியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர். பிணமாக கடந்தது தெரியவந்தது .அவரது உடலை கைப்பற்றி மாட்டுத்தாவணி போலீசார் இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சிகிச்சைக்கு வந்த வைரவசுந்தரம் தான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறந்தவர் என்று தெரியவந்தது.இது குறித்து, அவருடைய மனைவி விஜயாராணி கொடுத்த புகாரில், மாட்டுத்தாவனி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்காநத்தத்தில் முன்விரோதத்தில் பைக் எரிப்பு

மதுரை, பழங்காநத்தம் பசும்பொன் நகர் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் செல்வகுமார் 38. இவருக்கும், செந்தில்குமார் மகன் முத்துமணி என்பவருக்கும் சம்பள பிரச்சனையில் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், செல்வகுமார் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த பைக்கை முத்துமணி தீ வைத்து எரித்துவிட்டு, அவருக்கு மிரட்டல் விட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து, செல்வகுமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .

போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது பைக்குக்கு தீ வைத்து எரித்து மிரட்டல் விடுத்த முத்துமணியை கைது செய்தனர்.

உ.பி. மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

உத்தரபிரதேசம் கிராம் கோரி புஹரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சியாராம் மகன் திலீப் என்ற திலிப் குமார் சவுத்ரி 29. இவர் மதுரை கேகே நகர் லேக்வியூ மூன்றாம் குறுக்குத் தெருவில் தகர கொட்டகை அமைத்து தங்கி இருந்தார். அங்கிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.இவர் கிட்னிபாதிக்கப்பட்டு , மூளை நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதனால், மணமடைந்த வாலிபர் தான் தங்கி இருந்த தகரக் கொட்டையில் சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, அவர் அண்ணன் பங்கஜ்வர்மா அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, உ.பி.மாநில வாலிபர் திலீப் குமார் சவுத்ரியன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News