இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை பெண்: மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை
இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சித்த இலங்கைத் தமிழ்ப்பெண்ணிடம் மதுரை விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை
இலங்கை மத்திய மாகாணத்தை சேர்ந்த லூவராகினிய மாவட்டம், தளவாய்க் கிளை என்ற பகுதியைச் சேர்ந்த உமாவதி (வயது 35). இவர், தற்போது மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆறாவது தெருவில் கணவர் பிரதாப் குமாருடன் வசித்து வருகிறார்.
இங்கிருந்து ஆதார் அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் பெற்று உள்ளார். இந்நிலையில், இந்திய பாஸ்போர்ட்டுடன் இலங்கை செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், இலங்கை தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, குடியேற்றத்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உமாவதியிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். விசாரனையில் அவர், தனது மாமா மகனான பிரதாப் குமாரை மணந்து இந்தியாவிலேயே குடியேறியதாகவும், அதனைத் தொடர்ந்து. ஆதார் மற்றும் பாஸ்போர்ட் பெற்றதாகவும் கூறினார்.
இவர், இலங்கை நாட்டின் மத்திய மாகாணத்தில் உள்ள லுவரகிளியா மாவட்டம், தளவாய்கிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த இலங்கையில், தாய்மாமன் மகனான மதுரையை சேர்ந்த பிரதாப் குமாரை திருமணம் முடித்துள்ளார். 03.02.2016ம் தேதி இலங்கை விசா மூலம் இந்தியா வந்தவர் தொடர்ந்து கணவருடன் மதுரையிலேயே குடியிருந்துள்ளார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய நாட்டின் ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் இந்திய பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, குடியேற்றத்துறை அதிகாரிகள் உமாவதியிடம், விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கை பெண், இந்திய பாஸ்போர்ட் பெற்றது குறித்து மதுரை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.