கொரோனாவிலிருந்து காக்க அனுமன் சேனா அமைப்பு சிறப்பு பூஜை

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்களை காக்க திருப்பரங்குன்றத்தில் அனுமன் சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2021-07-22 13:20 GMT

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில்  இந்து அனுமன் சேனா அமைப்பினர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், இந்து அனுமன் சேனா சார்பாக, ஆடி மாதத்தை முன்னிட்டு, கொரோனா  மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

Tags:    

Similar News