மதுரையில் மதுபாட்டில்கள் பதுக்கல்: 6 பேர் கைது
மதுரையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பணை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பணை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 897 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மருது பாண்டியர் நினைவுதினம்,தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இதனால், மது பாட்டில்களை வாங்கி பதுக்கிவைத்து சிலர் அதிக விலைக்கு விற்று வந்தனர்.இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள், திருநகர், ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், செல்லூர் போலீசாரும் மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில சட்ட விரோதமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பணை செய்த 6 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 897 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.