மதுரை திருநகரில் பசும்பொன் தேவர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் நடைபெற்ற குருபூஜை
மதுரை திருநகரில் பசும்பொன் தேவர் வாழ்ந்த நினைவு இல்லத்தில் குருபூஜை நடைபெற்றது.
மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தில், இன்று காலை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 114- ஆவது பிறந்த நாள் மற்றும் 58 -ஆம் ஆண்டு குருபூஜை அதன் மேலாண்மை இயக்குநர் தேவி கலைவாணி ஆர். கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம், திருநகர் பேரூராட்சி மேனாள் சேர்மன் இந்திரா காந்தி, ஜெயிண்ட்ஸ் குரூப் முன்னோடி கிருஷ்ணசாமி, தி மு க வட்டச்செயலாளர் சுந்தர், கள்ளர் முரசு ஆசிரியர் ந. சுரேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வணங்கினர். ஏற்பாடுகளைச் நிர்வாகிகள் சசெய்திருந்தனர்,.இதில் பங்கேற்று வழிபட்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.