தொழிற்சங்களின் போராட்டத்தின்போது அரசு பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் கண்ணப்பன்

நாங்கள் எதிர்பார்த்ததை விடபெண்கள் 40 சதவீதத்திலிருந்து 62 சதவீதம் வரை கூடுதலாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்

Update: 2022-03-25 11:15 GMT

மதுரை விமானநிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

28,29, தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்: அதற்காக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:பெட்ரோல் டீசல் விலை உயர்வினால், அரசு போக்குவரத்து கழகத்தில் எந்தவித பாதிப்பும் வராது இதற்காக 22 ரூபாய் வரை மானிய விலையில் டீசல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டது.ஐ.ஓ.சி மூலம் டீசல் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.பெண்கள் கூட்டம் மிகுந்த நேரத்தில், பயணம் செய்ய பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக குறித்து

நாங்கள் எதிர்பார்த்ததை விடபெண்கள் 40 சதவீதத்திலிருந்து 62 சதவீதம் வரை கூடுதலாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இது உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிக வாக்குகள் அளித்துள்ளனர். பெண்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது.அரசு ,ஆயிரத்து 510 கோடியிலிருந்து 1900 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மாணவர்கள் பஸ்படியில் பயணம் மேற்கொள்வதைத் தடுக்க கவுன்சிலிங்  அளிக்கப்படும்..அது போல, ஆர்டிஓ அலுவலர்கள் மற்றும் போலீஸார் மூலம்  தக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து துறை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில மாணவர்கள் சில இடங்களில் பிரச்னை செய்கின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்தி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குறைவாக பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது தவறானது. முதலில் 14 ஆயிரம் பஸ்கள் ஒடின.தற்போது, 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.கூடுதலாக இயக்கப்படுகிறது. இதற்காக கண்டக்டர்கள் டிரைவர்கள் கூடுதல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கேட்கும் இடங்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பஸ்ஸில் தினமும் ஒன்றரை கோடி பேர் பயணம் செய்கின்றனர். அதற்கு ,ஏற்றார்போல் முதலமைச்சர் உத்தரவின் பேரில்,மக்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்

வரும் 28, 29ம் தேதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த  போராட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

Tags:    

Similar News