மதுரை செல்லூரில் அடுத்தடுத்து கடைகளில் தீ விபத்தில் பொருள்கள் சேதம்

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்;

Update: 2022-12-17 12:15 GMT

பைல் படம்

மதுரை செல்லூரில் அடுத்தடுத்து கடைகளில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்:

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் நான்காவது தெரு பகுதியைச்சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருக்கு சொந்தமான சில்வர் பட்டரையும் அதனருகிலயே சதுரகிரி இனிப்பகம் என்ற கடையும் செயல்பட்டுவருகிறது.இந்நிலையில் திடீரென இன்று காலை மின்கசிவு ஏற்பட்டு இரு கடைகளிலும் தீ பற்ற தொடங்கியது. இதனையடுத்து தீயானது மலமளவென கடைகளில் பரவ தொடங்கி நிலையில் கடைகளில் உள்ள மரச் சாமான் இயந்திரங்களில் தீபரவ தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் இரு கடைகளிலும் சேர்த்து ரூ 10லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெப்பக்குளம் பஸ் ஸ்டாப்பில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கியவர்  கைது :

மதுரை விரகனூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாண்டி மனைவி அழகு லட்சுமி(49 )..அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் சுந்தரம் 40. இவர்கள் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.அழகுலெட்சுமி, சுந்தரத்தின் மனைவிக்கு கடன் கொடுத்துள்ளார் .அந்த கடனை திருப்பி கேட்டதில் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தெப்பக்குளம் தியாகராஜர் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக அழகுலட்சுமி காத்திருந்தார் .அப்போது அங்கு சென்ற சுந்தரம் அவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார் .இந்த சம்பவம் குறித்து அழகு லட்சுமி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய சுந்தரத்தை கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே மாமியார் மருமகளை வழிமறித்து ஆபாசமாக பேசிய வாலிபர்கள் கைது:

மதுரை திருப்பரங்குன்றம் ஜே ஜே நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வி 42. திருப்பரங்குன்றம் கூடல் மலை தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கோகுல் ராம் 21. பசுமலை முனியாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் அமர்நாத் 22. இவர்களுக்கும் தமிழ் செல்விக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜே ஜே நகர் நான்காவது தெரு சந்திப்பு அருகே தமிழ்செல்வி அவருடைய மருமகளுடன் சென்று கொண்டிருந்தார். அவரை வாலிபர்கள் இருவரும் வழிமறித்து ஆபாசமாக பேசி திட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழ்செல்வி திருப்பரங்குன்றம் போலீசில் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை ஆபாசமாக திட்டிய கோகுல்ராம்(21) அமர்நாத்(22). இருவரையும் கைது செய்தனர்.

செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர் பலி:

மதுரை செல்லூர் முத்தையா செட்டியார் படித்துறையை சேர்ந்தவர் ஆகாசம் மகன் பால்பாண்டி( 39.). இவர் பாலம் ஸ்டேஷன் ரோடு தேவர் சிலை அருகே சென்றபோது திடீரென்று வந்து மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர்  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்த முதியவர் பைக் மோதி பலி:

மதுரை ஹரிஷன் காலனி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அழகர்( 63 .). இவர் பைபாஸ் ரோடு பொன்மேனி பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்து சென்றார்.அப்போது பெத்தானியாபுரம் சிவசாமி மகன் சிவானந்த்( 20 ) என்ற வாலிபர் ஓட்டிச் சென்ற பைக் மோதி விபத்தானது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் அழகரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே அழகர்  உயிரிழந்தார் .இந்த விபத்து குறித்து அழகர் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News