மதுரை அருகே பரவை பேரூராட்சியில் நெடுஞ்சாலையோரம் கொட்டும் குப்பையால் சுகாதார சீர்கேடு
Madurai News Tamil -பரவை பேரூராட்சியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்;
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
Madurai News Tamil -மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், மதுரை - திண்டுக்கல் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்.
இங்கே, பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் அள்ளப்படும் குப்பை திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பரவை பேரூராட்சிக்கு புதிதாக குப்பை வண்டிகள் வாங்கியும் அதை உபயோகப்படுத்தாமல் பேரூராட்சி வளாகத்திலேயே வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பரவை பேரூராட்சி பகுதியில் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை குளமாக காட்சி அளிக்கிறது.குறிப்பாக, மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏற்படும் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் பரவையை தாண்டி வாகனங்களில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் , கோழி ஆட்டு இறைச்சி ஆகியவற்றின் கழிவுகளை ரோட்டோரங்களில் கொட்டுவதால் அவற்றை நாய்கள் இழுத்து ரோட்டில் விட்டு செல்கின்றன. இதனால், மிகப்பெரிய சுகாதார கேடு நிலவி வருகிறது. பேரூராட்சி விரிவாக்க பகுதியில், உள்ள குப்பைக் கிடங்கு திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதால், அதலை பொதும்பு சிறுவாலை போன்ற கிராமங்களுக்கு செல்லும் வழியில் சிறந்த வழியில் குப்பைகளை கொட்டுவதால் மிகப்பெரிய அளவில் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
மேலும்,ரோட்டில் கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வரும் நீர் குடிநீர் ஆதாரங்களுடன் கலந்து பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.இது அனைத்திற்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ,பரவை பேரூராட்சியில் நிலவி வரும் சுகாதாரக்கேட்டை தடுத்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.மதுரை அருகே சமயநல்லூரில், சோழவந்தானுக்கு செல்லும் சாலையில் ரயில்வே பாதை ஒரமாக தொடர்ந்து குப்பைகள் கொட்டி வருவது, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மதுரை மாவட்ட ஊராட்சி நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2