மதுரை கோச்சடை பகுதியில், அடிக்கடி மின் தடை
மதுரை கோச்சடை பகுதியில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மக்கள் புகார்;
மதுரை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை நகரில், அண்ணாநகர், மேலமடை, கோச்சடை ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலமடை மின்சாரம் வாரியம், கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் பகுதிகளில் மின்சார வயர் அருகே மரக்கிளைகளை துரிதமாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
மக்கள் அவதி:
மதுரை மாநகராட்சியின் ஆமை வேகத்தால், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் தெரு, வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, காதர் மொய்தீன் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெருக்களில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து, சாலையில் ஓடுகிறது.
இரவு நேரங்களில் பாத சாரிகள் இருவர் கால் தடுமாறி விழுந்து காயமடைந்தனராம்.
இது குறித்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர், பொறியாளர்கள் இந்த இடங்களை பார்வையிட்டு, தண்ணீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.