மதுரையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
மதுரையில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை சார்பில், மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில், மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம் பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், சிவசந்திரன் ஆகியோர் முன்னிலையில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில், அப்பகுதியை சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றாவர்களில் 60 பேருக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.