திருப்பரங்குன்றம் கோயில் அருகே தீ விபத்து

யாரேனும் சிகரெட்டைக் குடித்துவிட்டு அதை அணைக்காமல் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-05-10 06:30 GMT

திருப்பரங்குன்றம் மலையில் நேரிட்ட தீயை அணைக்க போராடிய தீயணைப்புத்துறையினர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே உள்ள சரவணப் பொய்கை உள்ளது. சரண பொய்கை அருகே, உள்ள சுற்றுச்சுவர் காண கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அடர்ந்து வளர்ந்துள்ள காய்ந்த முள் மற்றும் இலை தழைகளை ஒரு ஓரமாக கொட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையில், இரவில் அளவில், திடீரென குப்பையிலிருந்து தீ மளமளவென எரியத் தொடங்கியது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கும், மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த  தீயை அணைத்ததால் மலையில் பிறபகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாரேனும் சிகரெட்டைக் குடித்துவிட்டு அதை  அணைக்காமல் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.  எனினும், துரிதமாக செயல்பட்டு காட்டுத்தீயாக மாறாமல் கட்டுக்குள் கொண்டுவந்து தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News