மதுரையில், இலவச காது, மூக்கு தொண்டை மருத்துவ முகாம்..!
ஹர்ஷினி மருத்துவமனை மற்றும் அனுப்பானடி கலங்கரை விளக்கம் ஏ.ஜி சபை சார்பில் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஹர்ஷினி மருத்துவமனை மற்றும் அனுப்பானடி கலங்கரை விளக்கம் ஏ.ஜி சபை சார்பில் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ பரிசோதனை முகாம்.
மதுரை.
மதுரையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மருத்துவ முகாமினை கீரைத்துறை காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி துவக்கி வைத்தார். மதுரை அனுப்பானடி அருகே உள்ள, கலங்கரை விளக்கம் ஏ.ஜி சபையில், ஹர்சினி மருத்துவமனை மற்றும் அனுப்பானடி கலங்கரை விளக்கம் ஏ.ஜி சபை இணைந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச
காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மருத்துவ முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில், கலங்கரை விளக்கம் ஏ.ஜி. சபையின் தலைமை போதகர் டி.ஆர்.ஜான் வின்ஸ்லி தலைமை தாங்கினார். உதவி போதகர் டேவிட் வரவேற்புரை வழங்கினார். இந்த இலவச மருத்துவ முகாமினை, கீரைத்துறைகாவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி,சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு மருத்துவ முகாமினை துவக்கிவைத்தார்.
மேலும், இந்த மருத்துவ முகாமின் போது காது கேளாமை, காதில் அழுக்கு அடைந்தல், காதுவலி,காதில் ரீங்காரம் ஏற்படுதல், தும்மல், மூக்கு அடைப்பு, வாசனை இன்மை, தலைவலி, தலைப்பாரம், முகவீக்கம், முக பாரம், கண் அரிப்பு, கழுத்தில் நெறிகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காது,மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் ரஜினிகாந்த் மற்றும் இந்து ஆகியோர் முன்னிலையில் மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.இந்த மருத்துவ முகாமில்,மதுரை அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த மருத்துவ முகாமின் போது, கலங்கரை விளக்க சபையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய் ராஜேஷ், நலவாரிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.