மதுரை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

கார்மேல் தேவாலயம் அருகிலுள்ள வீ'ட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார்;

Update: 2021-11-11 08:15 GMT

 மதுரை அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன்  உயிரிழந்தார்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகர், நெல்லையப்பர்புரத்தில்  வசித்து வந்தவர் ராமு( 32.)  எலக்ட்ரீசியன் ஆன இவர், நேற்று மாலை ஆறு மணி அளவில் திருநகர் ஏழாவது பேருந்து நிலையம்  கார்மேல் தேவாலயம் அருகிலுள்ள வீட்டில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு  ராமுவை பரிசோதித்த  மருத்துவர்,   அவர் ஏற்கெனவே  இறந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து, உடற்கூராய்வுக்காக  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இது குறித்து, திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News