பலத்த மழை எதிரொலி.. மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் ரத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது;
வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாலை 4 மணி முதல் மோசமான வானிலை இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல், இன்று மதியம் 11.55 AM, 6E-7196 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் 56 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்ல இருந்தது. தற்போது சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால் மாலை 5 மணிக்கு மேல் மதுரையிலிருந்து புறப்படும் என மதுரை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 பயணிகளும் மதுரை விமான நிலையத்தில் சென்னை செல்வதற்காக 3 மணி நேரம் காத்திருக்கின்றனர்.