சோழவந்தானில் காது மூக்கு தொண்டை மருத்துவ சிறப்பு முகாம்
Ear Nose and Throat Medical Special Camp at Cholavanthan;
சோழவந்தான் அரிமா சங்கம் மற்றும் ஹர்ஷினி மருத்துவமனை இணைந்து நடத்திய காது-மூக்கு-தொண்டை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரிமா சங்கம், ஹர்ஷினி மருத்துவமனை இணைந்து நடத்திய காது-மூக்கு-தொண்டை மருத்துவ முகாம் சோழவந்தான் மருது மகாலில் நடைபெற்றது. மருத்துவ முகாமினை, சோழவந்தான் நகர் அரிமா சங்கத்து தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் மருதுபாண்டியன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். அரிமா சங்க செயலாளர் பிச்சைமணி, பொருளாளர் காந்தன், வட்டாரத்தலைவர் கண்ணன ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹர்ஸினி மருத்துவமனை டாக்டர் ரஜினிகாந்த் மருத்துவ ர் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சக்கரை நோய் மருத்துவர் லட்சுமண ராஜ் பொதுமருத்துவர். பிரத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், காது-மூக்கு-தொண்டை மற்றும் பொது மருத்துவ சிறப்பு ஆலோசனைகள், இலவச செவித்திறன் பரிசோதனைகள், இலவச சர்க்கரை நோய் பரிசோதனைகள் மற்றும் முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் காது கேளாதோருக்கான கருவிகள் ,அரசு ஊழியர் மற்றும் ஓய்வு ஊழியர்களுக்கான இலவச அறுவை சிகிச்சைகள் தலை கழுத்து புற்று நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது.