மதுரையில் மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் போதைக்கு அடிமை ஆகிவிடக் கூடாது என பேரணியில் வலியுறுத்தப்பட்டது;
மதுரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மதுரை திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
போதைப் பழக்கத்தால், ஏற்படும் தீமைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூரண கிருஷ்ணன் மாணவர்களிடையே பேசுகைையில், போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று மாணவர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் போதைக்கு அடிமை ஆகிவிடக் கூடாது . தன் வாழ்க்கை மட்டுமல்லாது தனது குடும்பத்தின் வாழ்க்கையை சீரழித்து விடும். சக மாணவர்கள் யாரேனும் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை கட்டாயமாக ஆசிரியரிடம் தெரிவித்து அவர்களை நல்வழிப்படுத்த நீங்களும் உதவ வேண்டும் . நாளைய தலைமுறை உங்கள் கையில் உள்ளது என்பதை யாரும் மறக்க கூடாது என குறிப்பிட்டார்.மேலும், மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.