மதுரை அருகே விரகனூர் தடுப்பணையிலிருந்து நீர் வெளியேற்றம்

மானாமதுரை, பரமக்குடி, கமுதி, பார்திபனூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது;

Update: 2021-12-06 06:00 GMT

விரகனூர் மதகு அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்:

மதுரை வைகை அணையில் வெள்ளமாக வரும் உபரி நீர் விரகனூர் மதகு அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, விரகனூரில் தடுப்பு அணை 1975ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது. இந்த விரகனூர் தடுப்பணை 60 ஆயிரம் கன அடி கொள்ளளவு கொண்டது.

இதன் மூலம், விருதுநகர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்பப்படுகிறது. தற்போது, பெய்து வரும் தொடர் கனமழையால் வைகையில் இருந்து வரும் நீர் நேரடியாக விரகனூர் தடுப்பு மதகு வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி வரும் உபரி நீரை கிருதுமால் வாய்க்காலுக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் பாசன வசதிக்கு வெளியேற்றப்படுகிறது.

இதேபோல், வடபுறமுள்ள கால்வாய்மூலம் 400 கனஅடி நீர் சக்குடி, சக்கிமங்கலம் , பூவந்தி  வரை உள்ள கண்மாய்களுக்கு நீர் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 13ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றின் மூலம் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது. மானாமதுரை, பரமக்குடி, கமுதி, பார்திபனூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் பாசன வசதி பெற, வைகை ஆற்று நீரை கால்வாய் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். விரகனூர் மதகு அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து வெளியேற்றப்படுவதாக உதவி பொறியாளர் சிங்காரவேலு கூறினார்.

Tags:    

Similar News