மதுரை அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் ,ஸ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் உற்சவ விழாவில் இப்பந்தயம் நடந்தது;

Update: 2023-05-13 10:00 GMT

ஸ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயக்கில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் ,ஸ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவல்லி அம்மன் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திமுக ஒன்றிய செயலாளர்கள் பரந்தாமன், தன்ராஜ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இந்த போட்டியில், சிறிய மாட்டில் 19 ஜோடிகளும், பெரிய மாட்டில் 12 ஜோடிகளும் பங்கேற்றனர்.

பெரிய மாட்டில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரத்தை சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணனின் மாடு பரிசாக பெற்றது. சிறிய ரக மாட்டில் இரண்டு சுற்றாக நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை அரும்பனூர், கள்ளந்திரி மாடுகள் இணைந்து பெற்றது. மற்றொரு சுற்றில் முதல் பரிசை தேனி மாவட்டம், வெண்டி முத்தையா, மாடும், இரண்டாம் பரிசை கல்லணை விஷ்வா ரவிச்சந்திரன் மாடும் பெற்றது. விழா ஏற்பாடுகளை, அ.புதுப்பட்டி கிராம பொதுமக்கள்,மாட்டு வண்டி பந்தய குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News