மதுரையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திரண்டு வந்து வரவேற்ற திமுகவினர்
முதல்வரை வரவேற்க மக்கள் திரண்டதன் காரணமாக, விமானநிலையப்பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது;
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திரண்ட மக்கள் கூட்டம்
மதுரைத்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவதற்காகவும் பசும்பொன் தேவர், மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து, விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருக்கு, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக முதல்வரை வரவேற்க, சோழவந்தான், திருவேடகம், மேலக்கால், திருமங்கலம், அவனியாபுரம், சேடபட்டி, மேலூர், ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, திமுக ஒன்றியச்செயலர் முதல் கிளை நிர்வாகிகள் வரை வந்து கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதன்காரணமாக, விமானநிலையப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.