மதுரை அருகே டோல்கேட் வரி உயர்வைக் கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு சுங்க வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மதுரை எலியார் பத்தி சுங்க சாவடியை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர்;
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, சுங்க சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, மதுரை தேமுதிக மாநகர தெற்கு மாவட்டம் சார்பாக, மதுரை எலியார்பத்தி பகுதியில் உள்ள சுங்க சாவடியை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா .மணிகண்டன் உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
முற்றுகை போராட்டத்தில் அவைத் தலைவர் ராமர், பொருளாளர் சரவணன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்வின். பாபு, மாணிக்கவாசகம், சின்னதாய், பொதுக்குழு உறுப்பினர் பார்த்திபன், ஜெயராமன், பகுதி கழகச் செயலாளர் மோகன், தனபால், பத்மநாபன், மாரியப்பன், லெட்சுமணன், இப்ராகிம், ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, சுங்கக் கட்டண வரியை குறைக்கக் கோரி, தேமுதிகவினர் கோஷமிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செப் 1- முதல் சுங்கக்கட்டணம் உயர்வு...
ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அதன்படி, தற்போது 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம், மதுரை எலியார்பத்தி, சேலம் ஓமலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
கார்களுக்கான கட்டணம் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு 78 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு 165 ரூபாயிலிருந்து 175 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதிக சக்கரங்களை கொண்ட லாரிகளுக்கான கட்டணம், சக்கரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 270 ரூபாய் முதல் 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.