தமிழ்நாடு குறித்து ஆளுநர் கூறிய கருத்துக்கு தேமுதிக கண்டனம்

ஆளுநர் சொன்ன கருத்திற்கு எதிராக ஒட்டு மொத்த தமிழக மக்களின் சார்பாக தேமுதிக எதிர்ப்பை தெரிவிக்கிறோம்;

Update: 2023-01-08 11:45 GMT

தேமுதிக  பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த்

தமிழ்நாடு என்ற பெயர் குறித்து ஆளுநர் கூறுவது அரை வேக்காட்டுதனமானது என்றார் தேமுதிக பொருளாளர். பிரேமலதா:

மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ்நாடு என பெயர் தேவை இல்லை, தமிழகம் மட்டுமே போதும் என, ஆளுநர் ரவி தெரிவித்தது குறித்த கேட்டபோது,

தமிழுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு என்ன தெரியும். அரைவேக்காட்டுதனமாகஅவர் சொன்ன கருத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக தேமுதிக எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.அவர் சொன்ன கருத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாக தேமுதிக எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

தமிழக அரசின் புதிய மக்கள் அடையாள அட்டை குறித்த அறிவிப்பு குறித்த கேட்டதற்கு, மக்களுக்கு தர வேண்டிய அனைத்து சலுகைகளும் தரப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது, வெளிநிலத்தை சேர்ந்ததொழிலாளர்கள் இங்கு வேலை பார்கிறார்கள். இது குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகம் போல் ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஐடி உருவாக்கினால், நாட்டில் மிகப்பெரிய குழப்பத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்

திட்டத்தை ஏற்படுத்தும், முன் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதனால், மக்கள்,ஐடி என்பது மக்களால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிந்து கொண்டு, இந்த அரசு அதைப்பற்றி பேச வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு,தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது .எங்களை பொறுத்தவரை தேமுதிக கட்சி பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். உட்கட்சி பணிகள் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன், செயற்குழு ,பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கழகத்தினுடைய வளர்ச்சியை நாங்கள் எதிர் கொண்டு இருக்கிறோம்.தேர்தல் வரும் நேரத்தில் உரிய அறிவிப்பை தலைவர் அவர்கள் வெளிப்படுத்துவார்.

செவிலியர்கள் பணி நீக்கம் குறித்த கேட்டபோது, ஏற்கெனவே, செவிலியர்களுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருக்கிறோம். கொரோனா எனும் கொடிய நோய் உலகை ஆட்டிப்படைத்த போது, அத்தனை கோடி மக்களையும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து காப்பாற்றியவர்கள் செவிலியர்கள்.கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது.இந்த மாதிரி சூழ்நிலையில், செவிலியர்கள் பணி நீக்கம் செய்தது தவறு.

உங்களுக்கு தேவை ஏற்படும்போது, மீண்டும் தற்காலிகமாக பணியில் அமர்த்தும் போது அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறும். அவர்களை பணி நீக்கம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களுக்கு ஊதிய உயர்வளித்து மீண்டும் பணியில் அமைக்க தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கருவேப்பிலை மாதிரி நாம் தேவையை உபயோகித்துவிட்டு  தூக்கி எறிவதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். செவிலியர்களுக்கு உரிமைக்கு, நிச்சயம் இந்த அரசு செவிசாய்த்து அவர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி வழங்க தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.பின்னர், கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News