அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்த மாவட்ட அதிமுக செயலாளர்

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக மாவட்ட செயலர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பிரசாரம் செய்தார்

Update: 2022-02-15 01:30 GMT

மதுரை மாநகராட்சியில்  அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

சிந்தாமணி பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து  திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பிரசாரம் மேற்கொண்டார்

மதுரை மாநகராட்சி தேர்தலில், அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் என்று பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை 89-வது வார்டில் ,அதிமுக சார்பாக கவிதா செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, சிந்தாமணி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ,எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவிற்கு, பொதுமக்கள் ஒன்று கூடி மலர்தூவி வரவேற்றனர்.

கூட்டத்தில், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்,முதலில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்னை 30,000 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெற வைத்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம் கடந்த 9 மாதங்களாக திமுகவால் எந்தவித நலத்திட்டங்களையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட இந்த பகுதியில் கவிதா மாரியப்பனுக்கு வாக்களித்து, மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவை வெற்றியடைய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News