சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் இடையூறு: பொதுமக்கள் புகார்
மாநகராட்சி ஆணையர் தரப்பில் சாலைகளை திரியவிட்டால் கால்நடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது;
மதுரையில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்
மாநகராட்சி எச்சரிக்கையை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை நகரில் பல இடங்களில் சாலைகளில் கால்நடை திரிவதால் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மதுரையில் கால்நடை வளர்ப்போர் தினசரி கால்நடைகளை சாலைகளில் திரியவிடுவதால், அப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கால்நடைகள், ஆங்காங்கே சானங்களைப் போட்டு, அசிங்கப்படுத்துவதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது எனசமூக ஆர்வலர் மாநகராட்சி மீது புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி ஆணையர் தரப்பில், கால்நடைகளை சாலைகளை திரியவிட்டால், கால்நடை உரிமையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், தினமும் மதுரை நகரில், அண்ணாநகர் கேகே நகர், திருப்பாலை, புதூர், கருப்பாயூரணி, வண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் கால்நடை சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.
இதனால், அப்பகுதி மக்கள் பரவலாக பாதிக்கப்படுகின்றனர் என, குற்றச்சாட்டு எழுகிறது. இதுகுறித்து, மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் விரும்புகின்றனர்.