மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் தடையால் தர்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றம்

வழக்கம் போல தமிழக அரசு தடைவிதித்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்;

Update: 2021-10-06 11:57 GMT

மஹாளய அமாவாசையையொட்டி  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல்  மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில், முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சரவணப்பொய்கை உள்ளது. திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் மகாளயபட்ச அமாவாசையான இன்று (திதி) பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க, கொரான பெருந்தொற்று காரணமாக கோவில், நிர்வாகம்  தடை விதித்திருந்தது. இதனால், ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Tags:    

Similar News