ஆடி வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட கோயில் களில் திரண்ட பக்தர்கள்

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்;

Update: 2023-07-28 10:00 GMT

சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம்.

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்

ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி அர்ச்சனை செய்து பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இக்கோவிலில் பெண்கள் கூழ் காய்ச்சி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி பக்தர்களுக்கு கூழ் வழங்கினார்கள். கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி,வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திரௌபதிஅம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது பக்தர்களுக்கு கூழ் வழங்கினர்.இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால்,குப்புசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், மதுரையில் அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயங்களில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், உள்ள வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு , பக்தர்கள் சார்பில் பால், தயிர், இளநீர், மஞ்சள்பொடி போன்ற அபிஷேக திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து, அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News